இது மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இயற்கை சுற்றுச்சுழல் ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றினால் நிதியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கிழக்கு அங்கிலியா ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவானது பருவகாலம், வெப்ப மண்டலச் சூறாவளிகள் மற்றும் இதர காலநிலை தொடர்பான முன் அறிவிப்பின் துல்லியமான கணிப்பிற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்தக் குழுவானது தெற்கு வங்காள விரிகுடாவில் R.V. சிந்து சாதனா கப்பலின் மீது பயணம் மேற்கொண்டு கடல்சார் பண்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.